Nov 24, 2007

பாய்ச்சல்




மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப் பக்கத்தில்

மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப்

பறந்து போனது.


இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா. நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது. ஒரு மரத்தையாவது

அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா. என்று கயிற்றைப் பார்த்து கேட்டது கோடரி.

மரங்கொத்தியால் அது முடியாது. என்றது கயிறு.

ஏன் அப்படிச் சொல்கிறாய்

கயிறு சொன்னது.

நாலு மரத்தையும் வெட்டுகிறவன்

ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை.


- காசி ஆனந்தன் கதைகள்

2 comments:

  1. Very Very Good Story.

    Wondering where can i purchase this book?

    Which publisher sir

    Kindly tell us.

    ReplyDelete
  2. காந்தளகம் என்ற புத்தகக்கடையில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.
    (முதல் மாடி, ரகிசா கட்டடம்
    68, அண்ணா சாலை 44-28414505)

    மிகவும் அருமையான புத்தகம்

    ReplyDelete