Dec 27, 2007

இனி புத்தகங்களை படிக்க வேண்டாம்!



புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க முடியாதவர்கள், தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் முக்கியமாக பார்வையற்றவர்களுக்கு மிகவும் உதவும் வகையில் சென்னையைச் சேர்ந்த கிழக்கு பதிப்பகம் ஆடியோ வடிவிலான புத்தகங்களை வெளியிட்டு உள்ளது. இதனை பேசும் புத்தகங்கள் என்றும் சொல்லலாம். தமிழ் பதிப்பகத்துறையில் இது முதல் முயற்சி என்று நினைக்கிறேன்.

யார் இதனால் அதிகளவில் பயனடைகிறார்கள்.?
முக்கியமாக பார்வையற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஒலிப்புத்தகங்கள் உதவி செய்யக்கூடும். யாருடைய உதவியுமின்றி அவர்களாகவே ஆடியோ பிளேயரில் அவர்களுக்கு பிடித்த தலைப்பிலான ஒலிப்புத்தகங்களை கேட்டு மகிழலாம்.

படிப்பது என்றாலே மாணவர்களுக்கு வேப்பங்காய் மாதிரி. இது போன்ற ஒலிப்புத்தகங்களை அவர்கள் கேட்டாலே போதும். அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். இது தவிர ஒரு முறை படித்த புத்தகத்தை மற்றொரு முறை படிக்க வேண்டுமெனில் அதற்கென்று நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒலிப்புத்தகங்களை திரும்பத்திரும்ப கேட்டு மகிழலாம். ஒவ்வொரு முறை கேட்பதினால் மனதில் எளிதாக பதியும். நம்மவர்களுக்கு படிப்பதை விட கதை போல் கேட்பதில் தானே சுகம்.

ஒலிப்புத்தகத்தை செல்போனிலும் கேட்கலாம். அதற்கு உங்களுடைய மெமரி கார்டு 1ஜிபி அளவில் இருந்தால் நல்லது. பயணத்தின் போது புத்தகத்தை சுமக்காமல் செல்போனிலேயே ஒரு புத்தகத்தை படித்து இல்லை கேட்டு முடிக்கலாம். மேலும் கண்ணிற்கு வேலை போய் செவிக்கு வேலை. ஆனால் பாடல் கேட்டதால் காது வலி என்று இது வரை யாரும் சொன்னதாக தகவல் இல்லை. ஆகவே, இது போன்ற ஒலிப்புத்தகங்கள் மேலும் பலவற்றை கிழக்கு கொண்டு வர வேண்டும்.

எடிசன்
ஹிட்லர்
சேகுவேரா
ஃபிடல் கேஸ்ட்ரோ
என்று பல ஆடியோ வடிவிலான புத்தகங்கள் கிடைக்கின்றன.


இனி யாரும் படிக்க நேரம் இல்லை என்று சொல்ல முடியாது.
அதற்குப்பதில் கேட்க நேரம் இல்லை என்று சொல்வார்களோ?

Dec 13, 2007

IT துறையினர் கவனிக்கவும்...

நட்பு

ஒரு பெண்ணிடம் உன் இதயத்தைக் கொடு
அதை அவள் உடைத்து தருவாள்.
உடைந்த இதயத்தை நண்பனிடம் கொடு
அதை அவன் ஒட்ட வைத்துத் தருவான்.
அது தான் நட்பு.

வெற்றி

காயமில்லாமல் கனவுகள் காணலாம்
ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது.

மௌனம்

நான் இறந்ததற்கு அவள் மௌன அஞ்சலி செலுத்தினாள்...
ஆனால் அவளுக்கே தெரியாது நான் இறந்தது
அவள் மௌனத்தால் தான் என்று

இரவுக் காவலன்

நீ உறங்கி எழும் வரை
நான் உறங்காமல் காத்து கொண்டு இருக்கிறேன்.
ஒரு இரவுக்
காவலனைப் போல...

நட்பு

ஒருவர் இதயத்தில் இன்னொருவர் வாழ்வது தான் காதல்
ஆனால் ஒருவர் இன்னொருவரின் இதயமாகவே வாழ்வது தான் நட்பு.

நினைவு

நீ என் நினைவில் வந்து போகும் சித்திரம் இல்லை.
என் இதயத்தில் செதுக்கிய சிற்பம்.

இதயம்

வாசித்த கவிதையில் யோசிக்க வைத்த வரிகள்...
நேசிக்க இதயம் கேட்டேன். சுவாசிக்க இதயம் கொடுத்தாய்.
யோசிக்கிறேன் நேசிக்க இதயம் இல்லாமல் சுவாசிப்பது எப்படி என்று.

பூக்கள்

நூறு வருடங்கள் வாழும் மனிதன் அழுதுகொண்டே பிறக்கின்றான்...
ஆனால் சில நேரம் வாழும் பூக்கள் சிரித்துக்கொண்டே பூக்கின்றது.

மௌனத்தின் அர்த்தங்கள்

மௌனம் என்ற மொழியின் அர்த்தங்கள் தெரியுமா?

இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்.
உண்மையானவர்கள் பிரியும் போது மௌனம் துன்பம்
காதலில் மௌனம் சித்திரவதை
தோல்வியில் மௌனம் சாதனைப்படி
வெற்றியில் மௌனம் அடக்கம்
இறுதியில் மௌனம் மரணம்

பிறப்பு

அழுது கொண்டே பிறந்தேன்..
ஏன் இந்த பிறப்பென்று..
நீ என் வாழ்வில் வந்த பின்பு அறிந்தேன் உன் அன்பிற்கே
ஆயிரம் முறை பிறக்கலாம் என்று...

தேடல்

நீ தேடும் போது உன் அருகில் நான் இல்லாமல் போகலாம்.
ஆனால்...


நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன்.