Nov 21, 2008

கலைஞரை வஞ்சித்த புகழ் மற்றும் அன்பு !

இன்றைய முரசொலியில் கலைஞர் உடன்பிறப்புக்கு எழுதியுள்ள தலையங்கம்!








Nov 13, 2008

சன்னை நெருங்கும் கலைஞர் ! -வெளிவரும் புதிய சேனல்கள், உருவாகும் கலைஞர் நெட்வொர்க்

கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு தான் ஆகிறது. அதற்குள் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம்பிடித்து விட்டது. புதுப்புது நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள், வித்யாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,குடும்பத் தலைவிகளை கவரும் நாடக்ங்கள் என சன்டிவிக்கு சவால் விடும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். சன் டிவிக்கு இப்போது தான் உண்மையான நெருக்கடி ஆரம்பித்துள்ளது. தங்களை நிருபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

முன்பெல்லாம் சன்டிவியில் Scrolling ஐ ஏதேனும் மிக முக்கிய நிகழ்வுகள், தேர்தல் அறிவிப்புகள் ஆகியவற்றின் போதுதான் பார்க்க முடியும். ஆனால் தற்போது அடிக்கடி பார்க்க முடிகிறது. ஏதோ முக்கியமான ப்ளாஷ் நியூஸ் என்று ஆவலோடு பார்த்தால்
5 வருடத்திற்கு முன்பு வந்த ஹாலிவுட் படங்களை தூசு தட்டி, தமிழ்படுத்தி காணத்தவறாதீர்கள் ஹாலிவுட் சூப்பர்ஹிட் திரைப்படம் என்று Scroll செய்கிறார்கள். இது தவிர சில நிகழ்ச்சிகள் இந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்பதை அறிவிக்கவும் Scroll ஓடுகிறது. ஏன் இந்த நிலை?.

இது தவிர கடந்த வாரம் 8 மணி நாடகத்தை நிறுத்தி விட்டு ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு ஒளிபரப்பினார்கள். ஏன் இந்த மாற்றம்? எல்லாம் டீஆர்பி ரேட்டிங் செய்த மாயம்.


வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் சன்டிவியில் 2 திரைப்படங்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த வருடம் தீபாவளியன்று 3 திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள்.சன்டிவியில் நிகழ்ச்சிக்கு பஞ்சமா அல்லது கிரியேடிவ் ஆட்கள் பற்றாக்குறையா என்று தெரியவில்லை.

இது போதாதென தீபாவளியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் சன்டிவியின் டீஆர்பி ரேட்டிங் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கலைஞர் டிவியின் டீஆர்பி ரேட்டிங் சன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சன்னை டென்ஷனாக்க கலைஞர் டிவிலிருந்து அடுத்து பலப்பல புதிய சேனல்கள் வரிசையில் வர காத்துக் கொண்டிருக்கின்றது. சிரிப்பொலி, கலைஞர் 24 மணி நேர செய்திகள் அது போக 24 மணி நேர திரைப்பட சேனல் என்று தொடர்ந்து பல சேனல்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கிறது. இது தவிர தெலுங்கு, மலையாள சேனல்கள் வேறாம்.
மேலும் முன்னணி தினசரி பத்திரிகை மற்றும் FM ஒன்றை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் கலைஞர் தரப்பினர்.


இது போக தற்போது முரசு என்ற பெயரில் கேபிள் மூலம் திரைப்பட பாடல்கள் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவும் கலைஞர் டிவியின்
ஓர் கேபிள் சேனல். இதில் மிக அருமையான பழைய திரைப்பட பாடல்கள் மற்றும் 1980களில் வெளிவந்த சூப்பர்ஹிட் பாடல்கள் இளையராஜா ஹிட்ஸ், எஸ்பிபி ஹிட்ஸ்
என தேர்ந்தெடுத்த பாடல்களாக ஒளிபரப்புகிறார்கள்.


ஆக மக்கள் மனதில் சன்டிவிக்கு அடுத்த இடத்தில் கலைஞர் டிவி இடம் பிடித்து விட்டது. முதலிடம் பிடிக்க சில காலம் மட்டுமே ஆகலாம். எதிலுமே நம்பர் 1 ஆக விரும்பும் சன் குழுமம் விழித்துக் கொண்டால் சரி. இனி மேலும் திரைப்படங்களை வைத்து மட்டும் நேரத்தையும், காலத்தையும் ஓட்டாமல் அறிவு சார்ந்த, பொழுது போக்கான புதிய நிகழ்ச்சிகளை சன் டிவி ஒளிபரப்பினால் மட்டுமே தன்னுடைய
இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். செய்வார்களா?