தற்போது தமிழில் காமிக்ஸ் புத்தகங்கள் பெருமளவில் வருவது கிடையாது. 1970,80 களில் நிறைய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வந்தன. இதற்கென்று தனியாக வாசகர் வட்டம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் காமிக்ஸ் புத்தகங்கள் காணாமல் போயின.அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் திரு.ராகுலன். அவர்கள். இவர் ஸ்டார் காமிக்ஸ் என்ற பெயரில் தற்போது தமிழில் காமிக்ஸ் புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறார். அதைப் பற்றின செய்தி ஜெயா டிவியில் ஒளிபரப்பானது.
அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றின குறுந்தகடு விழா நேற்று (21.01.08) அன்று சென்னை நாரதகான சபா விழாவில் நடைபெற்றது. A Little Dream என பெயரிடப்பட்டுள்ள இந்த குறுந்தகட்டை தனபால் என்பவர் இயக்கியுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த மின்வெளி மீடியா எனும் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. விற்பனையாகும் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த குறுந்தகட்டின் தொகை சிறகு எனும் தொண்டு அமைப்பிற்குச் செல்லும்.