Feb 8, 2008

கலைஞரை எதிர்க்கும் கலாநிதிமாறன்! - இடம் மாறும் சன்.டிவி



மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது.
ஆனால் இன்றுவரை சன் டிவிக்கும் கலைஞருக்கும் ஆரம்பமான பிரச்னை தீரவில்லை.

கடந்த பிப்ரவரி 2 & 3, 2008 அன்று சன்மியூசிக் சேனலில் காலையிலிருந்து மாலை வரை ஒரு scrolling ஓடிக் கொண்டிருந்தது. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் காம்பியரிங் வேலைக்கு தேவை என்றும், உடனே உங்கள் பயோடேட்டாவை கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது.

பெரும்பாலும் சன்மியூசிக் சேனலில் காம்பியரிங் பணிக்கு அங்கு பணிபுரிவர்களின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மேலிடத்திற்கு நெருக்கமானவர்களின் நண்பர்கள் என்று நட்பு வட்டத்திற்குட்பட்டவர்களுக்குத்தான் வேலை கிடைக்கும். இப்போது என்ன புதிதாக அறிவிப்பு வெளியிடுகிறார்களே என்ற வியப்பு எழுந்தது. மேலும் சன்டிவியில் எந்தவொரு வேலைக்கும் ஆள் எடுக்க வேண்டுமென்றால் பெரும்பாலும் ஞாயிறு, இந்து நாளிதழில் தான் விளம்பரம் கொடுப்பார்கள்.

அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல். பிப்ரவரி 3 அன்று கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் வீட்டு இல்லத்திருமணம் அறிவாலயத்தின் பின்புறம் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலைஞர் வந்து கலந்து கொள்வார் என்று எல்லோருக்கும் தெரியும்.

கலைஞரை அறிவாலயத்தின் உள்ளே வராமல் தடுத்து இடையூறு செய்ய வேண்டுமென்பது மாறனின் திட்டம். சரி சன்மியூசிக் சேனலில் காம்பியரிங் பணிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

அறிவிப்பு வந்த தினத்தன்று கிட்டத்தட்ட 3000 இளைஞர்கள் விண்ணப்பங்களோடு அறிவாலயத்தில் குவிந்து விட்டனர். எங்கு பார்த்தாலும் டூ வீலர்கள். விடுமுறை நாள் ஆதலால், கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அறிவாலயத்திற்கு எதிரே ட்ராபிக் ஜாம் ஆகி விட்டது. வண்டி நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. கலைஞரின் உதவியாளர் திருமண விழாவாதலால் பல முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் இடத்தை நிரப்பி விட்டன.

சரியாக கலைஞர் அறிவாலயத்திற்கு நுழையும் போது பெரும் சிக்கல் ஏற்பட்டது. விண்ணப்பங்கள் கொடுக்க வந்தவர்கள் வண்டி செல்லும் பாதையை அடைத்துக் கொண்டும், டூ வீலர்களும் இருந்ததால் கலைஞரின் கார் சிறிது நேரம் நின்று விட்டது. பிறகு போலீசார் தடியடி செய்து அனைவரையும் கலைத்தனர். பாவம் அப்பாவி இளைஞர்கள் அடிவாங்கிக் கொண்டு சென்றனர். நம்மில் யாரையும் இந்தப் பணிக்கு கூப்பிடப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியுமா என்ன?

கலைஞரின் இடத்திலேயே இருந்து கொண்டு அவரையே எதிர்த்துக் கொண்டு தன் நிறுவனத்தை கலாநிதி மாறன் தைரியமாக நடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட இவ்வளவு தைரியமாக செய்ய மாட்டார்கள்.


இதற்கிடையே சன்டிவி செய்திகள் கலைஞர் டிவியினால் மாறிக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்து கடுப்பான கலைஞர் சன்டிவி உயரதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 'நாங்கெல்லாம் சிற்றரசர்கள் நீங்கள் பேரரசர்கள் எதற்காக எங்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்' என்று கோபமாக கேட்டிருக்கிறார்.

இதற்கிடையே மக்கள் டிவியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். 'எங்கள் தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் செய்திகள் இடம்பெறும். நேரத்தை மாற்ற மாட்டோம். மக்கள் செய்திகளைப் பாருங்கள்' என்று. (நக்கல்)


சன் டிவியின் அலுவலகம் இடம் மாறப்போகிறது என்று பல மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதுவரை எந்தவித அறிகுறியும் தென்படவில்லையே என்று கேட்பவர்களுக்கு இந்த நியூஸ். சன்டிவியின் ஒரு பகுதி அலுவலகம் காலி செய்யப்பட்டு விட்டது. மற்ற பகுதிகளில காலி செய்யும் வேலைகளும் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டு விட்டன. மந்தவெளியில் உள்ள ஒரு ஓட்டல் லீசுக்கு எடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் அங்கு செயல்படும். பிற்பாடு பெருங்குடியில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்படும்.


டெயில் பீஸ்: அறிவாலயத்தின் முகப்பில் சன்டிவி,
கலைஞர் டிவி விளம்பரப்பலகை அருகருகே இடம் பெற்றிருந்தது.
தற்போது சன்டிவி விளம்பரப் பலகை மிஸ்ஸிங்.

1 comment:

  1. how can u collect the information
    is it true? are u that event?

    ReplyDelete