Jan 30, 2008

தமிழ் காமிக்ஸ் - ஒரு நல்ல முயற்சி



தற்போது தமிழில் காமிக்ஸ் புத்தகங்கள் பெருமளவில் வருவது கிடையாது. 1970,80 களில்
நிறைய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வந்தன. இதற்கென்று தனியாக வாசகர் வட்டம் இருந்தது.
ஆனால் காலப்போக்கில் காமிக்ஸ் புத்தகங்கள் காணாமல் போயின.அந்தக் குறையை
நிவர்த்தி செய்திருக்கிறார் திரு.ராகுலன். அவர்கள். இவர் ஸ்டார் காமிக்ஸ் என்ற பெயரில் தற்போது தமிழில் காமிக்ஸ் புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறார். அதைப் பற்றின செய்தி ஜெயா டிவியில் ஒளிபரப்பானது.

Jan 22, 2008

டாக்டர் அப்துல் கலாம் - வாழ்க்கை வரலாறு குறுந்தகடு வெளியீடு



அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றின குறுந்தகடு விழா நேற்று (21.01.08) அன்று
சென்னை நாரதகான சபா விழாவில் நடைபெற்றது. A Little Dream என பெயரிடப்பட்டுள்ள
இந்த குறுந்தகட்டை தனபால் என்பவர் இயக்கியுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த மின்வெளி மீடியா எனும் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. விற்பனையாகும் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த குறுந்தகட்டின் தொகை சிறகு எனும் தொண்டு அமைப்பிற்குச் செல்லும்.

Jan 18, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - சன்டிவி - 18.01.08


சென்னைப் புத்தகக்கண்காட்சி நிறைவு நாளைப் பற்றிய சிறப்புச் செய்தி
சன் டிவியில் ஒளிபரப்பானது.

Jan 13, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - ஜெயா ப்ளஸ்-13.01.08


சென்னைப் புத்தகக்கண்காட்சியில் சிறுவர் நூல்கள் - பற்றிய தலைப்பில்
சிறப்பு நிகழ்ச்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

Jan 8, 2008

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 - சன்நியூஸ் - 08.01.08


சென்னை புத்தகக் கண்காட்சி 2008 பற்றிய செய்தி சன்நியூஸ் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பானது.

Dec 27, 2007

இனி புத்தகங்களை படிக்க வேண்டாம்!



புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க முடியாதவர்கள், தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் முக்கியமாக பார்வையற்றவர்களுக்கு மிகவும் உதவும் வகையில் சென்னையைச் சேர்ந்த கிழக்கு பதிப்பகம் ஆடியோ வடிவிலான புத்தகங்களை வெளியிட்டு உள்ளது. இதனை பேசும் புத்தகங்கள் என்றும் சொல்லலாம். தமிழ் பதிப்பகத்துறையில் இது முதல் முயற்சி என்று நினைக்கிறேன்.

யார் இதனால் அதிகளவில் பயனடைகிறார்கள்.?
முக்கியமாக பார்வையற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஒலிப்புத்தகங்கள் உதவி செய்யக்கூடும். யாருடைய உதவியுமின்றி அவர்களாகவே ஆடியோ பிளேயரில் அவர்களுக்கு பிடித்த தலைப்பிலான ஒலிப்புத்தகங்களை கேட்டு மகிழலாம்.

படிப்பது என்றாலே மாணவர்களுக்கு வேப்பங்காய் மாதிரி. இது போன்ற ஒலிப்புத்தகங்களை அவர்கள் கேட்டாலே போதும். அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். இது தவிர ஒரு முறை படித்த புத்தகத்தை மற்றொரு முறை படிக்க வேண்டுமெனில் அதற்கென்று நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒலிப்புத்தகங்களை திரும்பத்திரும்ப கேட்டு மகிழலாம். ஒவ்வொரு முறை கேட்பதினால் மனதில் எளிதாக பதியும். நம்மவர்களுக்கு படிப்பதை விட கதை போல் கேட்பதில் தானே சுகம்.

ஒலிப்புத்தகத்தை செல்போனிலும் கேட்கலாம். அதற்கு உங்களுடைய மெமரி கார்டு 1ஜிபி அளவில் இருந்தால் நல்லது. பயணத்தின் போது புத்தகத்தை சுமக்காமல் செல்போனிலேயே ஒரு புத்தகத்தை படித்து இல்லை கேட்டு முடிக்கலாம். மேலும் கண்ணிற்கு வேலை போய் செவிக்கு வேலை. ஆனால் பாடல் கேட்டதால் காது வலி என்று இது வரை யாரும் சொன்னதாக தகவல் இல்லை. ஆகவே, இது போன்ற ஒலிப்புத்தகங்கள் மேலும் பலவற்றை கிழக்கு கொண்டு வர வேண்டும்.

எடிசன்
ஹிட்லர்
சேகுவேரா
ஃபிடல் கேஸ்ட்ரோ
என்று பல ஆடியோ வடிவிலான புத்தகங்கள் கிடைக்கின்றன.


இனி யாரும் படிக்க நேரம் இல்லை என்று சொல்ல முடியாது.
அதற்குப்பதில் கேட்க நேரம் இல்லை என்று சொல்வார்களோ?

Dec 13, 2007

IT துறையினர் கவனிக்கவும்...

நட்பு

ஒரு பெண்ணிடம் உன் இதயத்தைக் கொடு
அதை அவள் உடைத்து தருவாள்.
உடைந்த இதயத்தை நண்பனிடம் கொடு
அதை அவன் ஒட்ட வைத்துத் தருவான்.
அது தான் நட்பு.

வெற்றி

காயமில்லாமல் கனவுகள் காணலாம்
ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது.

மௌனம்

நான் இறந்ததற்கு அவள் மௌன அஞ்சலி செலுத்தினாள்...
ஆனால் அவளுக்கே தெரியாது நான் இறந்தது
அவள் மௌனத்தால் தான் என்று

இரவுக் காவலன்

நீ உறங்கி எழும் வரை
நான் உறங்காமல் காத்து கொண்டு இருக்கிறேன்.
ஒரு இரவுக்
காவலனைப் போல...