Oct 24, 2008

வைகோ கைது ! வீடியோ பதிவு

Oct 22, 2008

சென்னையில் பலத்த மழை

கடந்த ஒரு வாரமாக சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இன்று (22.10.08) காலை தி.நகரில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு.

Oct 7, 2008

சூப்பர் ஸ்டார் vs அல்டிமேட் ஸ்டார் - ஜெயிக்கப்போவது யாரு?




ரஜினி நடித்த கடைசி சூப்பர் ஹிட் படம் எது
தெரியுமா.? சந்திரமுகி. (ரஜினிக்கே இந்த விஷயம் தெரியாது)
இப்படிக்கூறித்தான் சன்டிவி இந்தப்படத்திற்கு விளம்பரத்தை சேர்க்கிறார்கள்.
தீபாவளியன்று சன்டிவியில் சந்திரமுகி திரைப்படம்
ஒளிபரப்பாகவிருக்கிறது. சன்டிவியிடம் இருக்கும் ரஜினியின்
கடைசி சூப்பர் ஹிட் படம் சந்திரமுகி மட்டுமே.
இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்ய 10sec க்கு ரு.45,000.
விலை நிர்ணயித்துள்ளது சன்டிவி. தென்னிந்திய தொலைக்காட்சி
வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு இந்த அளவு தொகைக்கு விற்கப்படும் படம்
சந்திரமுகிக்குத்தான்.

இந்தப் படத்திற்கு சரியான போட்டியாக தல யின் சூப்பர்ஹிட்
படமான பில்லா (ஒரு வகையில் இதுவும் ரஜினி படம்தான்)
கலைஞர் டிவியில் தீபாவளியன்று ஒளிபரப்பாகவுள்ளது.
இதில் விளம்பரம் செய்ய 10sec க்கு ரு.25,000.
பில்லா படம் திரைக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது.
ஆனால் சந்திரமுகி படம் வந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.
இருந்தாலும் சன்டிவியிடம் இருக்கும் ஒரே கடைசி ரஜினி படமான
சந்திரமுகி எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கும் என தெரியவில்லை.

இது தவிர சமீப நாட்களில் சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் இடையேயான போட்டி
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியை
யாரும் பார்க்கக் கூடாதென்று அந்த நேரத்தில் ஹாலிவுட் படங்களை
ஒளிபரப்புவது, கலைஞர் டிவியில் லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது
ரஜினியின் படத்தை கேடிவியில் ஒளிபரப்புவது என்று சன்டிவி போட்டிபோடுகிறது.


கலைஞர் டிவியில் கடந்த வாரம் சனிக்கிழமையன்று ராஜாஜி ராஜா திரைப்படம் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு செய்தார்கள். அதே நாள் காலையில் கேடிவியில் அந்தப்படத்தை ஒளிபரப்பு செய்துவிட்டார்கள்.வேறு வழியில்லாமல் கலைஞரில் குரு விஷ்யன் ஒளிபரப்பானது. இது போக தங்களிடமிருந்து கைவிட்டுப் போன படங்களை சன்டிவி டாப் டன்னில் கொண்டு வராது. அப்படியே கொண்டு வந்தாலும் அதில் உள்ள குறைகள் மட்டுமே மிகைப்படுத்தப்படும்.

உதாரணமாக குசேலன் படத்தை கலைஞர் டிவி வாங்கி விட்டது என்ற ஒரே காரணத்திற்காக தினகரன் நாளிதழ் அந்தப் படத்தை கிழிகிழியென்று கிழித்து விட்டது. தொடர்ந்து ஒரு வாரம் குசேலன் படத்தை மட்டுமே தலைப்புச் செய்தியாக தினகரனில் இடம் பெற்றது.

ஆனால் விஷால் நடித்த சத்யம் படம் சன்டிவியில் டாப் 10ல் பல வாரங்களாக முதலிடத்தில் இருந்தது. விஷால் நடித்த படங்களிலேயே அதிக அளவு செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். ஆனால் விஷால் நடித்த படங்களிலேயே வேகமாக பெட்டிக்குள் சுருண்ட படம் சத்யம். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படு பிளாப். ஆனால் இந்தப் படத்தை ஒவ்வொரு வாரமும் நெ.1 என்று அறிவிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. தாங்கள் தான் புத்திசாலி மக்கள் எல்லாம் முட்டாள் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சன்டிவி.

இத்தனை ஆண்டு காலம் மீடியா துறையில் இருக்கும் சன்டிவி இம்மாதிரியான செயல்களின் மூலம் தன்னைத்தானே சிறுமைபடுத்திக் கொண்டிருக்கிறது.
சந்திரமுகியா? பில்லாவா ? இதில் எந்தப் படத்திற்கு விளம்பரங்களை கொடுக்கலாம் என்று விளம்பர நிறுவனங்கள் தற்போது குழப்பத்தில் உள்ளன.

Sep 23, 2008

எந்திரன் பட ஸ்டில்ஸ்- என்ன கொடுமை ஷங்கர் இது

ஷங்கரின் ஒவ்வொரு படத்திற்கும் தவறாமல் பத்திரிகையில் இந்தச் செய்தியை படிக்கலாம்.
இந்தப் படப்பிடிப்பிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐடி கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. இப்படியாக படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறும். சிவாஜி படத்திற்கும் இப்படித்தான் பெரிய அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்தார்கள். கடைசியில் ஒரு கூடை சன்லைட் பாடல் காட்சியின் அனைத்து போட்டோவையும் ஷங்கரே இணையதளத்தில் தான் பார்த்து தெரிந்து கொண்டாராம்.

எந்திரன் படத்திற்கு இதைவிட பலத்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கம்ப்யூட்டர் மூலம் வரையப்பட்ட ஒரே ஒரு ரஜினியின் போட்டோ மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் அதையும் மீறி சில ஸ்டில்கள் வெளிவந்துள்ளன. பெரு நாட்டில் நடைபெற்ற பாடல் ஷூட்டிங்கின் ஸ்டில்கள் தான் கீழே இருப்பது. கூடிய விரைவில் பாடல்களையும் எதிர்பார்ப்போம்.
என்ன கொடுமை ஷங்கர் இது.






Aug 26, 2008

அடையார் வாசிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

அடையார் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் புதியதாக http://www.adyarplus.com/ என்ற வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் ஏராளமான தகவல்கள், உதவிகள் என பலதரப்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

சிறப்பம்சமாக, இந்த பகுதிகளில் வாழும் மக்களில் யாருக்காவது நீங்கள் வாழ்த்துகள் அனுப்ப விரும்பினால், அதையும் கூட இந்த வலைத்தளத்தில் பதிவு செய்வதன் மூலம் எளிதாக இருந்த இடத்திலிருந்தே அனுப்ப முடியும்.

இலவச வரிவிளம்பரங்கள், குறிப்பிட்ட பொருட்கள் விற்கும் கடைகளின் பட்டியல்கள் என்று அன்றாட வாழ்வுக்கு மிகவும் தேவையான முக்கிய தகவல்களை எளிதில் இங்கு பெற முடிகிறது. இந்த பகுதிகளை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றின் முகவரிகளும் இங்கு கிடைக்கிறது.

இவற்றைத் தவிர, என்ஜிஓ எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு, ஆன்லைனில் ஒரு இலவச வலைப்பக்கம் வழங்கவும் இந்த வலைத்தளம் தீர்மானித்துள்ளது. பல வகையில் மிகவும் அவசியமான தகவல்களை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்கள் அறியவும் இந்த வலைத்தளம் மிகவும் பயன்படக்கூடியது..

மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

May 20, 2008

டான்ஸ் ஆடிய ஜெ!


கோடை விடுமுறையை கொண்டாட கொடநாடு சென்றிருக்கும் ஜெயலலிதா அங்கு படுகர் இன மக்களுடன் மகிழ்ச்சியுடன் டான்ஸ் ஆடுகிறார்.

Feb 12, 2008

காதல் என்பது என்ன? விளக்குகிறார் கவிப்பேரரசு வைரமுத்து



காதல் என்பது என்ன? கவிதை எழுதுவது எப்படி? காதலித்தால் கவிதை வருமா?
இப்படி பலப்பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

Feb 8, 2008

கலைஞரை எதிர்க்கும் கலாநிதிமாறன்! - இடம் மாறும் சன்.டிவி



மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது.
ஆனால் இன்றுவரை சன் டிவிக்கும் கலைஞருக்கும் ஆரம்பமான பிரச்னை தீரவில்லை.

கடந்த பிப்ரவரி 2 & 3, 2008 அன்று சன்மியூசிக் சேனலில் காலையிலிருந்து மாலை வரை ஒரு scrolling ஓடிக் கொண்டிருந்தது. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் காம்பியரிங் வேலைக்கு தேவை என்றும், உடனே உங்கள் பயோடேட்டாவை கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது.

பெரும்பாலும் சன்மியூசிக் சேனலில் காம்பியரிங் பணிக்கு அங்கு பணிபுரிவர்களின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மேலிடத்திற்கு நெருக்கமானவர்களின் நண்பர்கள் என்று நட்பு வட்டத்திற்குட்பட்டவர்களுக்குத்தான் வேலை கிடைக்கும். இப்போது என்ன புதிதாக அறிவிப்பு வெளியிடுகிறார்களே என்ற வியப்பு எழுந்தது. மேலும் சன்டிவியில் எந்தவொரு வேலைக்கும் ஆள் எடுக்க வேண்டுமென்றால் பெரும்பாலும் ஞாயிறு, இந்து நாளிதழில் தான் விளம்பரம் கொடுப்பார்கள்.

அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல். பிப்ரவரி 3 அன்று கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் வீட்டு இல்லத்திருமணம் அறிவாலயத்தின் பின்புறம் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலைஞர் வந்து கலந்து கொள்வார் என்று எல்லோருக்கும் தெரியும்.

கலைஞரை அறிவாலயத்தின் உள்ளே வராமல் தடுத்து இடையூறு செய்ய வேண்டுமென்பது மாறனின் திட்டம். சரி சன்மியூசிக் சேனலில் காம்பியரிங் பணிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

அறிவிப்பு வந்த தினத்தன்று கிட்டத்தட்ட 3000 இளைஞர்கள் விண்ணப்பங்களோடு அறிவாலயத்தில் குவிந்து விட்டனர். எங்கு பார்த்தாலும் டூ வீலர்கள். விடுமுறை நாள் ஆதலால், கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அறிவாலயத்திற்கு எதிரே ட்ராபிக் ஜாம் ஆகி விட்டது. வண்டி நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. கலைஞரின் உதவியாளர் திருமண விழாவாதலால் பல முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் இடத்தை நிரப்பி விட்டன.

சரியாக கலைஞர் அறிவாலயத்திற்கு நுழையும் போது பெரும் சிக்கல் ஏற்பட்டது. விண்ணப்பங்கள் கொடுக்க வந்தவர்கள் வண்டி செல்லும் பாதையை அடைத்துக் கொண்டும், டூ வீலர்களும் இருந்ததால் கலைஞரின் கார் சிறிது நேரம் நின்று விட்டது. பிறகு போலீசார் தடியடி செய்து அனைவரையும் கலைத்தனர். பாவம் அப்பாவி இளைஞர்கள் அடிவாங்கிக் கொண்டு சென்றனர். நம்மில் யாரையும் இந்தப் பணிக்கு கூப்பிடப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியுமா என்ன?

கலைஞரின் இடத்திலேயே இருந்து கொண்டு அவரையே எதிர்த்துக் கொண்டு தன் நிறுவனத்தை கலாநிதி மாறன் தைரியமாக நடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட இவ்வளவு தைரியமாக செய்ய மாட்டார்கள்.


இதற்கிடையே சன்டிவி செய்திகள் கலைஞர் டிவியினால் மாறிக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்து கடுப்பான கலைஞர் சன்டிவி உயரதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 'நாங்கெல்லாம் சிற்றரசர்கள் நீங்கள் பேரரசர்கள் எதற்காக எங்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்' என்று கோபமாக கேட்டிருக்கிறார்.

இதற்கிடையே மக்கள் டிவியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். 'எங்கள் தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் செய்திகள் இடம்பெறும். நேரத்தை மாற்ற மாட்டோம். மக்கள் செய்திகளைப் பாருங்கள்' என்று. (நக்கல்)


சன் டிவியின் அலுவலகம் இடம் மாறப்போகிறது என்று பல மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதுவரை எந்தவித அறிகுறியும் தென்படவில்லையே என்று கேட்பவர்களுக்கு இந்த நியூஸ். சன்டிவியின் ஒரு பகுதி அலுவலகம் காலி செய்யப்பட்டு விட்டது. மற்ற பகுதிகளில காலி செய்யும் வேலைகளும் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டு விட்டன. மந்தவெளியில் உள்ள ஒரு ஓட்டல் லீசுக்கு எடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் அங்கு செயல்படும். பிற்பாடு பெருங்குடியில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்படும்.


டெயில் பீஸ்: அறிவாலயத்தின் முகப்பில் சன்டிவி,
கலைஞர் டிவி விளம்பரப்பலகை அருகருகே இடம் பெற்றிருந்தது.
தற்போது சன்டிவி விளம்பரப் பலகை மிஸ்ஸிங்.