Dec 13, 2008

காதல் என்பது என்ன? கவிப்பேரரசு வைரமுத்துவின் விளக்கம்




கவிப்பேரரசு வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி கதையில்
நாயகன் திருஞானத்திற்கும் நாயகி ஓவியாவிற்கும்
இடையே நடைபெறும் காதலைப் பற்றிய கவித்துவமான உரையாடல்.
இது காலம் கடந்தும் நிற்கும்! காதலைப் பற்றிய அற்புத தத்துவம்!

அவன் அவசரமாய் ரோஜாவை நீட்டி ஐ லவ் யூ என்றான்.
அவளுக்கு அதிலொன்றும் அதிர்ச்சியில்லை.

நதி வந்து கலப்பதால் கடல் ஒன்றும் கைதட்டிக் கொள்வதில்லை.
கண்டனம் தெரிவிப்பதுமில்லை. நீட்டிய ரோஜாவை நிதானமாய்
வாங்கிக் கொண்டு 'நன்றி' என்றாள்.

அதிர்ச்சி அவனுக்குத்தான்.

அவள் முகத்தில் ஒரு வெட்க வெயில் அடிக்காதது கண்டு, அவன்
இருண்டு போனான்.

நீ.... நீ... நீயும்தானே என்று தப்புத் தப்பாய்த் தந்தியடித்தான்.

அவள் சிரித்தாள்... நீளமாய்ச் சிரித்தாள்.

அந்த சப்த அலைகள் அவன்மீது சாட்டை சொடுக்கின.

ஏன்? ஏன்? சிரிக்கிறாய். நான் சொல்வது உனக்குப் புதிதாய் இருக்கிறதா?

இல்லை. புதியதில்லை. அதுதான் சிரிக்கிறேன்.

புரியவில்லை

என்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன ஆட்களின் வரிசையில் நீங்கள்
கடைசியில் நிற்கிறீர்கள். ஐ லவ் யூ என்ற வார்த்தை ஒன்று தான்.
வாய்களே வேறு வேறு.

ஏன்? காதல் என்ற தத்துவத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையா?

தகராறு தத்துவத்தோடு அல்ல, தலைமுறையோடு!

இந்தத் தலைமுறைக்குக் காதலிக்கத் தெரியவில்லை.
காரணம் காதலென்றால் என்னவென்றே தெரியவில்லை.
சிகைக்காய் என்பது சீயக்காய் என்று திரிந்தத மாதிரி, காதல்
என்ற புனிதமான பதமும் பொருள் புரண்டுவிட்டது.

'காதல் என்பதன் புரளாத பொருள் யாது?'

"காதலை வெறும் தத்துவமாகப் பார்க்கிற கூட்டம், அதை
உள்ளம் சார்ந்ததென்றே உணர்த்துகிறது. காதலை ஒரு தாகமாகப்
பார்க்கிற கூட்டம், அதை உடல் சார்ந்ததாகவே உணர்கிறது.
ஆனால், உண்மையில் காதல் என்பது பாச உணர்ச்சியும், பாலுணர்ச்சியும் பின்னிப்பின்னி ஜடை போட்டுக் கொள்கிற சம்பவம். பாச உணர்ச்சி மட்டுடே காதலென்றால்
ஒரு பிராணி போதும். பாலுணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள்
போதும். ஆனால், இந்த இரண்டும் எந்தப் பளளியில் சந்தித்துக் கொள்கின்றனவோ,
அந்தப் புள்ளிதான் காதல்.இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்தப் புள்ளியில் நிற்கிறீர்கள்?"

Dec 12, 2008

சந்திரமுகி சாதனையை முறியடிக்கப் போகும் படம்!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து அதிக நாட்கள்
ஓடிய படம் என்ற சாதனையை சந்திரமுகி படைத்தது.
ஆனால் அதையெல்லாம் அதையெல்லாம்
தன்னுடைய ஹேர் ஸ்டைல், கூலிங்கிளாஸ், முறுக்கிய மீசை
மூலம் முறியடிக்கப் போகிறார் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்.
சமீபத்தில் திரைக்கு வந்த எந்த படமும் 100 நாட்களுக்கு மேல்
ஓடியதாகத் தெரியவில்லை. அதை நாயகன் படம்
முறியடித்து விட்டது. இந்தப் படம் இன்று 125வது நாள்.
கூடிய விரைவில் சந்திரமுகி சாதனையை
முறியடித்து கின்னஸில் இடம் பெறும் என்று நம்புவோம்.

Dec 10, 2008

அடியே கொல்லுதே! அழகோ அள்ளுதே!




வாரணம் ஆயிரம் படத்தில் உள்ள அனைத்து
பாடல்களும் கேட்பதற்கும், பார்ப்பதற்கும்
இனிமை.

இந்தப் படத்தைப் பார்த்த போது
முன்தினம் பார்த்தேனே, நெஞ்சுக்குள் பெய்திடுமா மழை
ஆகிய இரண்டு பாடலும்தான் நினைவில் இருந்தது. தொலைக்காட்சியிலும்
வானொலியிலும் தொடர்ந்து இந்தப் படத்திலுள்ள அனைத்து பாடல்களையும்
பார்த்து/கேட்ட போது தான் இதை விட அட்டகாசமான
மற்றொரு பாடலான அடியே கொல்லுதே பாடல் மற்ற
பாடல்களை விடவும் மிகவும் ஈர்த்தது.

காரணம் இந்தப்பாடலில் உள்ள இசை, பாடல் எடுக்கப்பட்ட இடங்கள்,
நடனம், பாடியவர், தாமரையின் உள்ளார்ந்த அர்த்தமுள்ள காதல் வரிகள் இந்தப்
பாடலை மீணடும் மீணடும் கேட்கத் தூண்டுகிறது.

இந்தப் பாடலின் சூழலைப் பாருங்கள்....
காதலன் காதலியை தேடி அமெரிக்காவிற்கு செல்கிறான். அவளை சந்திக்கிறான்.
அவள் அழகை புகழ்ந்து பாடுகிறான்.

--------------------------------
அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே

உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
-------------------------------------------
காதலியும் அவன் காதலை எற்றுக் கொள்கிறாள்.
அவள மனதில் காதலனைப் பற்றிய தன் உணர்வை இப்படி
அழகாக வெளிப்படுத்துகிறாள்.


உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே
------------------------------------

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ
-----------------------------------------------
தன்னுடைய காதலுக்கு காற்று, மின்சாரம், மழை, மண் ஆகியவற்றை
துணைக்கு அழைத்து பாடுகிறாள் காதலி.

வாடைக்காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே

உந்தன் கண்களில் ஏனோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே

மழைக்காலத்தில் சரியும்
மண் தரைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே

.......................................................................
அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே

ஒருசொல் ஒருசொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில்தோகை போலவே என் மீது ஊறுதே

எல்லா வானமும் மீண்டும் சில நேரம்
மாத்திரம் செந்துாரம் ஆகுதே

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்

உனைத் தோற்று நீ எனை வென்றாயே.

----------------------------------------

தன்னுடைய காதலுக்கு காற்று, மின்சாரம், மழை, மண் ஆகியவற்றை
துணைக்கு அழைத்து பாடுகிறாள் காதலி.

இந்தப் பாடலை பாடிய பெண். ஸ்ருதி கமல.
மிக அற்புதமாக பாடியிருக்கிறார். சமீரா ரெட்டிக்கு இவர் குரல் மிகச் சரியாக பொருந்தியிருக்கிறது.

இந்தப்பாடலில் தாமரை சாதாரணமாக ஆனால்
அசாதாரணமாக எழுதியிருக்கிறார்.

இசையோடும், பாடகரோடும், நடனத்தோடும்
கலந்து ஒரு காக்டெயில் விருந்தே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

தினமும் இப்பாடலை குறைந்தது 20 முறையாவது கேட்கிறேன்.தின்ன தின்ன
திகட்டாத இனிப்பைப் போல கேட்க கேட்க தேனாக இனி்க்கிறது இந்தப் பாடலின்
வரிகளும், பாடியவரின் குரலும்.

Dec 1, 2008

சென்னை துரைசாமி சப்வே இன்று மூடப்பட்டது






கடந்த நான்கு நாட்களாக சென்னையை தாக்கிய நிஷாவின் சீற்றத்திலிருந்து இன்னும் சென்னை மீளவில்லை. இன்று காலை பீக் ஹவர்ஸில் சென்னையின் பிஸியான
பகுதியான துரைசாமி சாலை மூடப்பட்டது. மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து இடுப்பளவுக்கு இருந்தததினால் அவ்வழி அடைக்கப்பட்டது. தினமும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.

கலைஞர் 24மணி நேர செய்திகள் தொடக்கம்

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் கலைஞர் 24மணி நேர செய்திகள் சேனல் நவம்பர் 30 அன்று தொடங்கப்பட்டது.







-நன்றி
தினமலர்