Dec 10, 2008

அடியே கொல்லுதே! அழகோ அள்ளுதே!




வாரணம் ஆயிரம் படத்தில் உள்ள அனைத்து
பாடல்களும் கேட்பதற்கும், பார்ப்பதற்கும்
இனிமை.

இந்தப் படத்தைப் பார்த்த போது
முன்தினம் பார்த்தேனே, நெஞ்சுக்குள் பெய்திடுமா மழை
ஆகிய இரண்டு பாடலும்தான் நினைவில் இருந்தது. தொலைக்காட்சியிலும்
வானொலியிலும் தொடர்ந்து இந்தப் படத்திலுள்ள அனைத்து பாடல்களையும்
பார்த்து/கேட்ட போது தான் இதை விட அட்டகாசமான
மற்றொரு பாடலான அடியே கொல்லுதே பாடல் மற்ற
பாடல்களை விடவும் மிகவும் ஈர்த்தது.

காரணம் இந்தப்பாடலில் உள்ள இசை, பாடல் எடுக்கப்பட்ட இடங்கள்,
நடனம், பாடியவர், தாமரையின் உள்ளார்ந்த அர்த்தமுள்ள காதல் வரிகள் இந்தப்
பாடலை மீணடும் மீணடும் கேட்கத் தூண்டுகிறது.

இந்தப் பாடலின் சூழலைப் பாருங்கள்....
காதலன் காதலியை தேடி அமெரிக்காவிற்கு செல்கிறான். அவளை சந்திக்கிறான்.
அவள் அழகை புகழ்ந்து பாடுகிறான்.

--------------------------------
அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே

உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
-------------------------------------------
காதலியும் அவன் காதலை எற்றுக் கொள்கிறாள்.
அவள மனதில் காதலனைப் பற்றிய தன் உணர்வை இப்படி
அழகாக வெளிப்படுத்துகிறாள்.


உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே
------------------------------------

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ
-----------------------------------------------
தன்னுடைய காதலுக்கு காற்று, மின்சாரம், மழை, மண் ஆகியவற்றை
துணைக்கு அழைத்து பாடுகிறாள் காதலி.

வாடைக்காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே

உந்தன் கண்களில் ஏனோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே

மழைக்காலத்தில் சரியும்
மண் தரைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே

.......................................................................
அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே

ஒருசொல் ஒருசொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில்தோகை போலவே என் மீது ஊறுதே

எல்லா வானமும் மீண்டும் சில நேரம்
மாத்திரம் செந்துாரம் ஆகுதே

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்

உனைத் தோற்று நீ எனை வென்றாயே.

----------------------------------------

தன்னுடைய காதலுக்கு காற்று, மின்சாரம், மழை, மண் ஆகியவற்றை
துணைக்கு அழைத்து பாடுகிறாள் காதலி.

இந்தப் பாடலை பாடிய பெண். ஸ்ருதி கமல.
மிக அற்புதமாக பாடியிருக்கிறார். சமீரா ரெட்டிக்கு இவர் குரல் மிகச் சரியாக பொருந்தியிருக்கிறது.

இந்தப்பாடலில் தாமரை சாதாரணமாக ஆனால்
அசாதாரணமாக எழுதியிருக்கிறார்.

இசையோடும், பாடகரோடும், நடனத்தோடும்
கலந்து ஒரு காக்டெயில் விருந்தே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

தினமும் இப்பாடலை குறைந்தது 20 முறையாவது கேட்கிறேன்.தின்ன தின்ன
திகட்டாத இனிப்பைப் போல கேட்க கேட்க தேனாக இனி்க்கிறது இந்தப் பாடலின்
வரிகளும், பாடியவரின் குரலும்.

7 comments:

  1. என்னையும் மிகவும் கவர்ந்தப்பாடல்.. :))உங்கள் விளக்கமும் அழகு.. :))

    ReplyDelete
  2. பாடல் வரிகளை என்னால் இசையோடு சேர்த்து கேட்கும் போது சில நேரங்களில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று நினைத்தபோது கிடைத்தது வரிகள், இங்கு தெளிவாக.

    ஆனாலும் கவிதை வரிகளை சாதாரணமாக கேட்கும் போது வரும் உணர்வை விட நீங்கள் அதை எழுதிய பிறகு படிக்கும் போது வருகிறது.

    இதை இவ்வளவு உணர்ச்சி மயமாக அணு அணுவாக ரசித்து எழுதிருக்கிறீர்கள் என்றால் எங்கேயோ மனதை பறிகொடுத்தவர் போல் தெரிகிறது.

    எனது வாழ்த்து(க்)கள்!

    ReplyDelete
  3. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!

    ReplyDelete
  4. அடடே,
    ஒரு கவிதையே (நீங்கள் தான்)
    இன்னொரு கவிதையை (இந்த கவிதையை)
    விரும்புகிறதே?
    அடடே, ஆச்சர்ய குறி.

    கிங் விஸ்வா.

    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  5. பிரமாதம் தமிழ்குட்டி

    ரசித்து அனுபவித்து எழுதி இறுக்கிருர்கள்
    அணுபவிக்க்க எங்களுக்கு விடியோ லிங்க் அளித்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்

    பிரதிப் துபாய்

    ReplyDelete
  6. hi,
    this is not a original song this was cpied from english song by harris jeyaraj... ( V.1000 song also not original songs...)

    ReplyDelete